Freelancer / 2026 மே 08 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
தவெகவிற்கான ஆதரவுக் கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.
இதில் காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்தது.
இந்நிலையில் இன்று தங்களது ஆதரவு முடிவை உறுதிப்படுத்தியுள்ளது சிபிஐ. நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தவெக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 பேர் விஜய்க்கு ஆதரவு அளிக்கவேண்டும். R
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago