Janu / 2026 மே 19 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெகிராவ பகுதியில் உள்ள அரசினர் விடுதியில் (Kekirawa Rest House) செவ்வாய்க்கிழமை (19) திடீர் வெடிப்புச்ம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த விடுதி ஊழியர் , சிகிச்சைக்காகத் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக விடுதியின் தளபாடங்களுக்கும், அதன் கூரைப் பகுதிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, வெடிப்பு நிகழ்ந்த இடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர் (Government Analyst) நேரில் சென்று சோதனை செய்யவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

23 minute ago
29 minute ago
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
44 minute ago
51 minute ago