Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2025 மே 02 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மன்னார், அடம்பன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.
1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட 28 பொதிகளும், 1400 படுக்கை விரிப்புகள் கொண்ட 14 பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ஸ்வர்ணபுரி. கிராமத்தில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் ஏராளமான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த வீட்டை வியாழக்கிழமை (1) சோதனை செய்தனர்.
இந்த பொருட்கள் அனைத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர், மேலும் சம்பவத்தில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025