Editorial / 2019 ஜூலை 20 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராழ்குழி பகுதியில், இன்று, படி வாகனமும் ஓட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் மூவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராழ்குழி கஜமுகா வித்தியாலயத்தில் தராம் 09இல் கல்வி பயிலும் 13 வயதுடைய நான்கு மாணவர்களே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
இந்த மாணவர்கள், மூதூர் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் பங்குபற்றுவதற்காக, ஓட்டோவில் சென்றபோதே இவ்விபத்து இடபெற்றுள்ளது.
இதையடுத்து, படி வாகனச் சாரதியை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago