2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது

Editorial   / 2024 ஜனவரி 05 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.கரன்

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த   பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார்.

இவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X