Mayu / 2026 மார்ச் 25 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்துக்கு இடையிலான விமானப் பயணங்களை, ரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நியூசிலாந்து மன்னிப்பு கோரியுள்ளது.
குறிப்பாக ஒக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் இதில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், மே மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, இது குறித்துப் பேசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், "மத்திய கிழக்கு மோதல் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் ஏற்பட்ட விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எமது கால அட்டவணையில் சில தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளோம்.
இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதோடு, வாடிக்கையாளர்களின் புரிதலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
7 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Apr 2026
04 Apr 2026