2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘விருந்துக்குச் சென்றதால் மதுஷுடன் தொடர்புடையவர்கள் என கூறமுடியாது’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாக்கந்துர மதுஷால் டுபாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்ளச் சென்ற கலைஞர்களுக்கும் மதுஷுக்கும் தொடர்புகள் இருக்கும் என்று சொல்ல முடியாதென, விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி​லேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கலைஞர்களுக்கு பணம் கிடைப்பதால் அவர்கள் குறித்த விருந்துபசாரத்தில் பாடுவதற்கு ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மதுஷுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றஞ்சுமத்துபவர்கள் அரசியல்வாதிகள் குறித்து எவ்வித பெயர்பட்டியலையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய, மதுஷை இலங்கைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார, மதுஷை மாத்திரமின்றி மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் ​தொடர்புடையவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படுமென்று தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .