2026 மே 01, வெள்ளிக்கிழமை

விலங்கிட முயன்ற பொலிஸாருக்கு கத்திக்குத்து

J.A. George   / 2021 மார்ச் 22 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருலப்பனை, நாகஸ்வத்த பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட கத்தி தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய மூன்று பொலிஸார் அங்கு சென்றுள்ளதுடன், சந்தேக நபரை இனங்கண்டு கைவிலங்கு இட முயற்சித்துள்ளனர்.

அப்போது, சந்தேக நபர் இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டாதாக ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

தாக்குதலை அடுத்து, சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதுடன், பின்னர் அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .