Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதைக்கு அடிமையான ஒருவர் திரைப்படத்தில் வரும் காட்சியை போன்று செய்த சம்பவமொன்று அப்பகுதியினர் மட்டுமில்லாமல் செய்தியை கேட்டவர்களுக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால் என்பவர் (வயது 40), மனைவியை தாக்கி அவரது கால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.
சம்பவத்தை பார்வையிட்ட கிராமத்தவர்கள் எவரும் அவரை தடுக்க முன்வரவில்லை என்பதுடன் அனைவரும் அலைபேசியூடாக காணொளி எடுத்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து பொலிஸார் கூறும்போது, ம்பவத்தை தடுக்காமல் படம் பிடிப்பதில்ஆர்வம் காட்டியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்பெண் தனது சகோதரி வீட்டுக்கு செல்ல விரும்பியதால் அவருக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில், அப்பெண்ணை 10 மாதங்களுக்கு முன் குறித்த நபர் ரூ.2 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago