Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம,; ஏப்ரல் 20 திங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்ப பிரிவு தெரிவி;த்துள்ளது.
இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் மே மாதம் 11 ஆம் திகதி திங்களன்று திறக்கப்படவுள்ளன.
பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்களுக்கு முடியுமானளவு தொலைக்கல்வி வசதிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும்போது, இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 16 காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago