2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்

Freelancer   / 2025 ஜனவரி 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

இந்த வீட்டுத்திட்டங்களில் சுமார் 4000 வீடுகள் அமைந்துள்ளன.

சிக்கலுக்குள்ளான ஒப்பந்ததாரர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிலித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X