Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது, கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய 14 வயதுடைய இரு சிறுமிகளை விடுதி ஒன்றிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சென்ற தனியார் பேருந்தொன்றின் நடத்துனர் மற்றும் சாரதி சனிக்கிழமை (5) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர் .
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய இரு சிறுமிகளின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக கண்டித்து வருவதன் காரணமாக அவர்களின் தொல்லை தாங்க முடியாது வீட்டை விட்டு கொழும்புக்கு சென்று தங்கி வாழ வேண்டும் என திட்டமிட்ட சிறுமிகள் புதன்கிழமை (02) அன்று காலை பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்கு சென்று ஓர் இடத்தில் தமது பாடசாலை உடைகளை மாற்றிக்கொண்டு கொழும்பு செல்வதற்காக பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்துள்ளனர் .
இதன் போது அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்த நிலையில் அதன் மூலம் ஓட்டுமாவடிக்கு சென்று அங்கிருந்து கொழும்பிற்கு செல்ல முடியும் என இருவரும் பேருந்தில் ஏறி ஓட்டுமாவடிக்கு செல்ல பிரயாண சீட்டை பெற்றுக் கொண்டுள்ளனர் .
பேருந்து வாகரைக்கு சென்றடைந்த நிலையில் , நடத்துனர் நித்திரையில் இருந்த இரு சிறுமிகளிடம் சென்று ஓட்டுமாவடிக்கு ரிக்ட் எடுத்துவிட்டு இறங்காமல் இருந்துள்ளீர்கள் தற்போது வாகரைக்கு வந்துள்ளீர்கள் என கூறியபோது தாங்கள் கொழும்புக்கு போவதாக சிறுமிகள் தெரிவித்த நிலையில், திருகோணமலை சென்று அங்கிருந்து ரயிலில் செல்ல முடியும் நான் ரயிலில் ஏற்றி விடுகிறேன் என நடத்துனர் கூறியுள்ளார் .
திருகோணமலைக்கு சென்றடைந்ததும் இரு சிறுமிகளையும் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் , ரயில் கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்று விட்டது எனவும் இனி கொழும்புக்கு பேருந்துகள் காலையில் தான் இருக்கும் எனவே அதுவரைக்கும் இருவரையும் அறை ஒன்றில் தங்க வைத்து அனுப்புவதாகவும் கூறி விடுதியொன்றில் இரு அறைகளை எடுத்து அந்த சிறுமிகளுடன் நடத்துனரும் சாரதியும் தங்கியிருந்து அவர்களை இரு தினங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து இரு சிறுமிகளையும் திருகோணமலையில் இருந்து வெள்ளிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு காத்தான்குடியில் விட்டு சென்றுள்ளதையடுத்து என்ன செய்வது என தெரியாது சிறுமிகள் வீடுகளுக்கு திரும்பி சென்று தமக்கு ஏற்பட்டதை வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியபடுத்தியதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருகோணமலை மற்றும் கல்முனை நாற்பட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 35, மற்றும் 27 வயதுடைய நடத்துனர் மற்றும் சாரதியை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய தனியார் பேருந்தையும் கைப்பற்றியுள்ளனர் .
கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
கனகராசா சரவணன்
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago