2025 ஜூலை 05, சனிக்கிழமை

வீதிகளிலுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 04:16 - 1     - {{hitsCtrl.values.hits}}

வாகனம் செலுத்துவோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் பலகைகளை உடனடியாக அகற்றுமாறு, மேல் மாகாண ஆளுநர் எஸ். அசாத்  சாலி  கொழும்பு மாநகர சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 

விளம்பரப்பலகைகள் வாகனம் செலுத்துவோருக்கு  இடையூறு விளைவிப்பதாகவும், வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபை  ஆணையாளர் வீ. ஏ. கே. அனுர மற்றும் விளம்பரப்படுத்தல் திணைக்களத்தின் உறுப்பினர்களை தனது அலுவலகத்தில் சந்தித்த போதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அத்துடன், மின்கம்பங்களில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகுமென அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 1

  • NOHADED Wednesday, 06 February 2019 12:56 PM

    VERY GOOD IDEA PLEASE FOLLOW THE MIDDLE EAST RULES AND REGULATION.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .