Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 04 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக வீதியோரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற சண்டையில் வர்த்தகர் ஒருவர் மீது கத்தி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (03) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் 4 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய வர்த்தகரான டிலக்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதியோரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டு வந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவது வழமை .
இந்நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை (03) இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனத்தை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் உயிரிழந்த அண்ணாவுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்தார் அவர் அங்கு வந்து சகோதரனுடன் வாய்த்தர்க்கத்தில ஈடுபட்ட வர்த்தகர் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மீது 4 பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பியோடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களும் பொலிஸில் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Apr 2025
30 Apr 2025