J.A. George / 2020 நவம்பர் 16 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான பிரசாரத்தை முன்னெடுத்த நபர், கண்டி ஹந்தான பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரால் வீதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதாக, சுகாதார சேவை தொடர்பில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்படவுள்ளாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொரோனா மரணம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட மற்றுமொரு நபர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்டதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
50 minute ago