2026 மே 14, வியாழக்கிழமை

dd

வெங்காய விலையும் எகிறியது

Editorial   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கிலோ கிராம் இந்திய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபாய் வரை இன்று (05) பிற்பகல் வரை அதிகரித்துள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காயத்தின் விலை கிலோ கிராம் ஒன்றுக்கு 400 முதல் 450 ரூபாய் வரை உள்ளதாகவும், வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய வெங்காயம் இருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 சில மாதங்களுக்கு முன், 40 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனையான, ஒரு சிறிய குவியல் தேங்காய், 180 ரூபாயாக மாறி, மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளதாக, தேங்காய் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .