Freelancer / 2025 மார்ச் 29 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும்.
இதேவேளை, மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. R
17 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
07 May 2026