Editorial / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும், உரிமையாளரின் கணவனை தாக்கியக்குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராமாவின் மஹசென்புர பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு ஒரு பிரெஞ்சு பெண் மசாஜ் செய்யச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், மசாஜ் மையத்தின் உரிமையாளராக கடமையாற்றிய பெண்ணின் கணவன், தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தனது இந்திய நண்பரிடம் பிரெஞ்சு பெண் கூறியுள்ளார்.
இந்த விஷயம் குறித்து விசாரிக்க இந்திய நண்பர் மசாஜ் நிலையத்துக்குச் சென்றபோது, இருவருக்கும இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், பாலியல் துன்புறுத்தலை செய்தார் என குற்றச்சாட்டப்பட்ட நபரை, வெளிநாட்டவர் தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக மசாஜ் மையத்தின் உரிமையாளரான பெண், காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) தகவல் அளித்துள்ளதார்.
அதன்படி, திஸ்ஸமஹாராம காவல்துறையினரால் இந்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தாக்குதலுக்கு உள்ளான நபர் டெபரவேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரெஞ்சுப் பெண்ணும் தடயவியல் மருத்துவரிடம் ஆஜர்படுத்த ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago