Janu / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 63 இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து , கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை , எபலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-652 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததுடன் அவர் கொண்டு வந்த பயணப் பை மற்றும் மூன்று பெட்டிகளுக்குள் இருந்து "பிளாட்டினம்" வகை சிகரெட்டுகள் 42,000 அடங்கிய 210 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
டீ.கே.ஜி கபில

35 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
3 hours ago