Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 நவம்பர் 26 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற கால நிலை காரணமாக வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ள சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான தாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் நிலையில்; அதனை கடந்து செல்ல முற்பட்ட போதே குறித்த நபரை வெள்ள நீர் இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்
அத்துடன் பட்டிப்பளை, காத்தான்குடி, கோறளைப்பற்று கிரான், மண்முனை வடக்கு, ஏறாவூர்பற்று செங்கலடி, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழையால் மாவட்டத்திலுள்ள பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் பல பிரதேசங்களில் வீதிகளில் உள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
அதேவேளை வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து, வவுணதீவுக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலான போக்குவரத்து, கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து, துண்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவு 10 உயரத்திலும் நவகிரி குளம் றூகம் குளம், வாகனேரி குளம், கட்டுமுறிவு குளம், கித்துள்குளம், வெலியாகண்டி குளம், வடமுனைகுளம், புனானைகுளம், ஆகிய குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அந்த அந்த குளங்களின் நீர் மட்டத்துக்கு ஏற்றவாறு அளவில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேவேளை மழையுடனான காற்றினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருகில் இருந்த மரம் ஒன்று கட்டிடத்தின் மீது முறிந்து விழுந்ததால் கட்டிடம் சேதமடைந்துள்ளதுடன் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதுடன் உயர்தர மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
43 minute ago