Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தவறான முறையில் விநியோகிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாகவே உத்தியோகபூர்வமாக விநியோகிக்கப்படும்.
சில வியாபார நிலையங்களில் மக்களை ஏமாற்றும் வகையில் இணையத்தளங்களில் தன்னிச்சையாக விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்து பொதுமக்களிடம் விநியோகித்து விண்ணப்பப்படிவங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவ்வாறு நிரப்பப்படும் குறித்த விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும். பொதுமக்கள் இதனை நம்பி ஏமாறவேண்டாம். ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இணையத்தளங்களில் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களினாலேயே குறித்த விண்ணப்பப்படிவம் விநியோகிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னரே வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படும். எனவே வதந்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என மக்களிடம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
45 minute ago
1 hours ago