Freelancer / 2026 மே 12 , மு.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று (11) ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.கவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் நேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு சென்ற விஜய்யை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.
இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார். (a)

44 minute ago
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
6 hours ago
6 hours ago