2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விபத்தில் தாயும் மகளும் பலி

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த கெப் ரக வாகனம், வீதியில் நடந்துச் சென்ற பெண்கள் இருவர் மற்றும் குழந்தையுடன் மோதியுள்ளது.

இதில் 49 வயதான தாய், அவரது மகளான 24 வயது பெண் ஆகியோரே பலியாகியுள்ளனர்.

சடலங்கள், தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .