2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விமலின் சகோதரருக்கு விளக்கமறியல் நீடிப்பு: ஜயந்தவுக்கு பிணை

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் என்பவரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை, விசேட சந்தர்ப்பத்தைக் கவனத்தில் கொண்டு, பிணையில் செல்வதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தின்போது, அரசாங்க வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில், பொலிஸ் நிதிக்குற்ற மோசடிப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்க கடந்த செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதியன்று சென்றிருந்த சரத் வீரவன்சவை, பொலிஸ் நிதிக்குற்ற மோசடி பிரிவினர் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .