2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வில்பத்து விவகாரம்: எதிர்க்க அவகாசம்

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து தேசிய வனாந்தரத்தில் குடியேற்றங்களை அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு ஜனவரி 7ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை(11) இந்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கால அவகாசம் வழங்கினார்.
வில்பத்து தேசிய வனாந்தரத்துக்கு உரித்துடைய ஆயிரக்கணக்கான ஏக்கர், சட்டவிரோதமான முறையில் சுத்தப்படுத்தி அதில் மீள் குடியேற்றம் செய்தமை மற்றும் சட்டவிரோதமான நிர்மாணங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரி, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த இந்த மனுவில், வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறே, ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மன்னார் மாவட்ட செயலாளர், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சட்டமா அதிபர் உள்ளிட்ட ஒன்பது பேர், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X