2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தவறி விழுந்து பலி

Gavitha   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றச் சம்பவமொன்றின் சந்கேத நபராக இனங்காணப்பட்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர், கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்காம் மாடியிலிருந்து தடுக்கி விழுந்து நேற்று வெள்ளிக்கிழமை (04) உயிரிழந்துள்ளார்.

பிட்டிபன வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், திடீர் சுகயீனம் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கம்பஹா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கம்பஹா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இரண்டு பொலிஸ் பாதுகாவலர்களுடன் வைத்தியசாலையில் இருந்த சந்தேக நபர், மலசலக்கூடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பாதுகாப்பில் இருந்தவர்களை ஏமாற்றி விட்டு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த நபர், கால் தடுக்கி நான்காம் மாடியிலிருந்து முதலாம் மாடியில் விழுந்துள்ளார். படுகாயமடைந்த நபர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .