2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாஸுக்கு எதிரான வழக்கு: நீதிபதி விலகினார்

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு உட்படுத்தும் நீதிபதிகள் குழாமிலிருந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான மணிலால் வைத்தியதிலக்க, சுயவிருப்பத்தின் பேரில்
விலகிக் கொண்டுள்ளார். 

வாஸ் குணவர்தன, குருநாகல் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றிய போது, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதியாக தான் கடமையாற்றியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

இரகசியப் பொலிஸின் உதவிப் பொலிஸ் அதிகாரியான சாந்தி அபேசேகரவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு உட்படுத்தும் நீதிபதி அடங்கிய குழாமில் இருந்தே, நீதிபதி விலகிக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .