2021 மே 06, வியாழக்கிழமை

ஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (18) காலை ஜா-எல நகரில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளானது, குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவருடையது என்றும்  தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர், மோட்டார் சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591589, 071-8591602 அல்லது 071-8591603 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .