Editorial / 2026 ஜனவரி 12 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழைய பொலிஸ் தலைமையகத்தின் முன் கருப்புத் துணியால் மூடப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கியுடன், சிவில் உடையில் நடந்து சென்ற இரண்டு லான்ஸ் கோப்ரல்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
1வது கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு லான்ஸ் கோப்ரல்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இரண்டு லான்ஸ் கோப்ரல்கள், சிவில் உடையில் ஸ்னைப்பர் துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும், அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க எந்த தேசிய அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை இல்லாமல் இருந்ததற்காகவும் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளில், இரண்டு லான்ஸ் கோப்ரல்களும் சில பயிற்சிகளுக்குப் பிறகு இந்த இடத்திலிருந்து பயணம் செய்ததாகவும், பயிற்சிக்குச் சென்றபோது ஸ்னைப்பர் துப்பாக்கியை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. பாதையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர்கள் இந்த வழியில் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
4 minute ago
10 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
3 hours ago