2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா, ஆர்.ரமேஸ், எஸ்.சதிஸ்

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுநர்கள், இன்று (6) காலை முதல்  வகுப்புப்  பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரியின் காரியாலயத்தில், மது அருந்திய பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை வெளியேற்றக்கோரியும் முறையான சுதமான உணவு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே, மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பிலும் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியின் சமையலறையில்,  முறையான சுத்தம் பேணப்பாடமை காரணமாக, சமயலறைக்கு நேற்று (5) மாலை சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியர் பயிலுநர்களுக்கு, நேற்று இரவும் இன்று காலையும் முறையான உணவு வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும் கல்லூரியின் பதிவாளர் உள்ளடங்களாக மூவர், கல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர் என்றும் இதனால் மாணவர்களுக்கும் மேற்படி மூவருக்கும் இடையில், நேற்று இரவு  முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்படுகிறது.

கல்லூரி வளாகத்தில், நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த திம்புள்ளை-பத்தனை பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், பதிவாளர் உட்பட மூவரைக் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .