2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் பலத்த பாதுகாப்பு

Freelancer   / 2023 நவம்பர் 04 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை பல தரப்பினர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக வந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து, கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் படு தோல்வியுடன், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு மற்றும் நிறுவன நிர்வாகிகள் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தெரிவுக்குழு மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .