Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜீ.கபில
ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின் கனிஷ்ட விமானி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக, குறித்த சேவை நிறுவனத்தின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குறித்த விமானி, தற்போது கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் இவர், நேற்றைய தினமே (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், பெரேரா கூறினார்.
குறித்த விமானி, இறுதியாகச் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு விமானத்தைச் செலுத்தியுள்ளார் என்றும் இவருடன் பணியாற்றிய ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின் 3 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், தற்போது அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும், தீபால் பெரேரா மேலும் கூறினார்.
குறித்த விமானி, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவர் என்றும் அந்தப் பாடசாலையில், கடந்த வார இறுதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியைப் பார்வையிடுவதற்கும் அவர் சென்றிருந்தார் என்றும் தெரியவருகிறது.
இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ள மற்றொரு பழைய மாணவர், குறித்த விமானியான பழைய மாணவருடன் பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், சுயமாகவே தங்களது வீடுகளில் தனிமைப்பட்டிருக்குமாறு, பேஸ்புக் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago