2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ.ல.சு கட்சி சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதியின் விசேட உரை

ஆர்.மகேஸ்வரி   / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில்  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிறேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையத்தில் இன்று  (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (26) இரவு ஜனாதிபதியின் தலைமத்துவத்தின் கீழ் கூடியது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கட்சியின் வேலைத்திட்டங்கள், எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு முகங்கொடுப்பது, தற்​போதைய அரசியல் நெருக்கடி, கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

கட்சியின் மத்திய குழுக் மூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், நாடுபூராகவும் மாவட்ட மட்டம், கிராம மட்டங்களிலும் சம்மேளனக் கூட்டங்கள் நடத்தப்பட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .