Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளை, இன்னும் இரண்டு நாட்களில் நிறைவுசெய்யும்படி, பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, 'கடந்த முதலாம் திகதி, நெல் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அன்று மாலை 5 மணியளவில் 3 இளைஞர்கள் கைதுசெய்;யப்பட்டனர். அதில் ஒருவர் அடுத்தநாள் அதிகாலை வேளையில் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்றார்.
'இதுவரை, 30க்கும் அதிகமான வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தது பொலிஸாராக இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்தவித பாரபட்சமும் இல்லை. இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த இளைஞனை கைதுசெய்யும் போது சில தவறுகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. எனினும், முமுமையான விசாரணையின் பின்னரே அதனை உறுதிசெய்ய முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.
8 minute ago
8 minute ago
20 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 minute ago
20 minute ago
34 minute ago