Princiya Dixci / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள், துறைமுகத்தில் மேற்கொண்டு வரும் போராட்டத்தினால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
குறித்த துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் இரண்டு சரக்கு கப்பல்களிலிருந்து பொருட்களை, இறக்கவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்துள்ளனர்.
துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த, 483 ஊழியர்களையும் நிரந்தரமாகப் பணிக்கு அமர்த்துமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும், செய்திகளை சேகரிக்க சென்றிருந்தவர்கள் மீதும் கடற்படையில் குண்டாந்தடிகள் மற்றும் துப்பாக்கிகளின் பிடிகளின் மூலமாக தாக்குதல்களை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
எனினும்,அதிகாரத்தைப் பயன்படுத்தாமால், கடற்படையினரை கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
43 minute ago