2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஹல்துமுல்லையில் நில நடுக்கம்

Editorial   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹல்துமுல்ல, வெலன்விட்ட, அக்கரசியா, லெமஸ்தோட்ட, முருதஹின்ன மற்றும் பிற பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (23) மாலை 6.46 மற்றும் 6.47 மணிக்கு ஒரு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் சிறிய அளவிலான நிலநடுக்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது பல்லேகல, ஹக்மன, மஹா கனதராவ மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள நிலநடுக்க உணரிகளால் பதிவு செய்யப்படவில்லை என்று பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஈ.எம்.எல். உதய குமார தெரிவித்தார்.

இருப்பினும், இந்த திடீர் நிலநடுக்கம் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் திருமதி கே.ஏ.ஜி. பிரியங்கிகா கேட்டுக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .