S.Renuka / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படை, 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 02 பொதிகளை கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களையும், 01 ஒரு டிங்கி படகும் சனிக்கிழமை (14) அன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகு, போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 02 பொதிகள் மற்றும் இரண்டு 02 சந்தேக நபர்கள் மன்னார் தல்பாடு இறங்குத்துறைக்கு கொண்டு வரப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய நிபுணத்துவ பரிசோதனையின் போது, படகில் இருந்த இரண்டு 02 பொதிகளில் 50 கிலோ கிராமை விட அதிகமான ஹஷிஷ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட 01 டிங்கி , 50 கிலோ கிராமை விட அதிகமான ஹஷிஷ் மற்றும் இரண்டு 02 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

- எம்.யூ.எம்.சனூன்
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago