Freelancer / 2026 மார்ச் 12 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
10 நாட்களுக்கு மேலாக இந்த போர் நீடித்து வருவதால், அதன் பாதிப்பு பல்வேறு நாடுகளிலும் வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது. இந்த போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடியது.
அதுமட்டுமல்லாமல் ஹார்மூஸ் நீரிணையில் எந்தக் கப்பல் வந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்தது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது.
இந்த நிலையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணை வழியாக பயணித்தன.
இந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் அட்டாக் நடத்தி இருக்கிறது. அதிலும் தாய்லாந்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சரக்கு கப்பலில் பயணித்த 23 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. R
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago