2025 மே 22, வியாழக்கிழமை

ஹிருணிகா எம்.பி தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட பகுதியில்  வைத்து இளைஞன் ஒருவரைக் கடத்தி அவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வகிபாகம் யாது என்பது குறித்து, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு சட்ட ஆலோசனை பெற்றுள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்குத் தொடர்பு உள்ளதாகவும் அவரைக் கைது செய்யவேண்டும் என்றும் பல கட்சிகள் கூறி வருகின்றன.  

தனது ஆதரவாளரின் குடும்பத் தகராறைத் தடுப்பதற்காகவே, இந்தச் செயற்பாட்டில் தான் ஈடுபட்டதாக ஹிருணிகாவும் தனது பக்கத்தை நியாயப்படுத்தி வருகின்றார். இதனாலேயே, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், ஹிருணிகாவை கைது செய்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தக் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்வங்களுடன் தொடர்புடையதாகக்  கூறப்படும் மேலும் இருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விருவரும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்ததையடுத்தே அவ்விருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X