2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் இளைஞர்கள் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை, வெலிக்கடை ஆகிய பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (07)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிராம் 850 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை பகுதியில்  1கிராம் 500 மில்லிகிராம் ஹெரோய்னுடன் சந்தலங்கா பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரொவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வெலிக்கடை, ஒபயசேகரபுர பகுதியில் 2கிராம் 350 மில்லிகிராம் ஹெரோய்னுடன் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரை, அளுத்கடை, 4ஆம் மாடி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) ஆஜர்படுத்தவுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .