George / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் போதைமருந்தை தம்வசம் வைத்திருந்த மூவர், பொலிஸாரால் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தவலையடுத்து, 7 கிராம் ஹெரோய்ன் போதைமருந்துடன் சந்தேகநபரொருவர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுமுல்லவில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்செய்யப்படவுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, 07ஆம் திகதி இரவு 9 மணியளவில் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹமுல்ல ரயில் நிலையத்துக்கு அருகில், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய் போதைமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக தெரிவித்த மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தள்ளதாகவம் கூறினார்.
இது இவ்வாறு இருக்க, மிரிஹான குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, ஹெரோய்னுடன் சந்தேகபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெஹிவளையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே கைதுசெய்ப்பட்டுள்ளதுடன் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
42 minute ago