George / 2017 மே 25 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசியக் கொடியில் தமிழ், முஸ்லிம் மக்களை அடையாளப்படுத்தும் நிறங்களை அகற்றிவிட்டு, தனிச் சிங்களக் கொடியை, தமிழர் பிரதேசத்தில் பறக்கவிட அனுமதிக்க முடியுமென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரின்றி, புலிக்கொடிகளை நாங்கள் ஏன் பயன்படுத்த முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கேள்வியெழுப்பினார்.
“தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு விதத்திலும், சிங்கள மக்களுக்கு ஒரு விதத்திலும் சட்டம் செயற்படுத்தப்படுகிறதா என, மக்கள் அஞ்சுகின்றனர். கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஞானாசார தேரரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வெளியில் நடமாடப் பயப்படுகின்றனர்” என்றார்.
நாடாளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (24) உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்,
“சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர, அனைவரையும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாராத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறினார். நாட்டின் ஓர் இனத்தை புறக்கணித்துவிட்டு எவ்வாறு அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப முடியும். இன்று, அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைப்பற்றி அதிகமாகப் பேசுகிறது.
“காணாமற் போனவர்களைத் தேடி உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் 92 நாட்களாக தொடர்கிறது. அந்தமக்கள் மழை, வெயில் பாராது கடும் துன்பங்களுக்கு மத்தியில் போராடி வருகின்றனர். அந்த மக்களின் கோரிக்கையை ஏறெடுத்துப் பார்க்காத இந்த அரசாங்கத்தால், தமிழர்களை புறக்கணித்துவிட்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகாது” என்றார்.
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025