2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'ஆவா குழு இப்படிதான் உருவாகியதாம்'

Kanagaraj   / 2016 நவம்பர் 02 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் பெரும் தலையிடியை கொடுத்துகொண்டிருக்கின்ற ஆவா குழுவானது எப்படி உருவானது என்பது தொடர்பில், சுகாதாரத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன விளக்கமளித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, ஆவா குழு எப்படி உருவானது என்பது குறித்து தெளிவுப்படுத்தினார்.

யுத்தக்காலத்திலேயே இந்த ஆவா குழு உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் இருந்த பிரபல்யமானவரின் தேவைக்கு அமைவாகவே இந்தக்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு இராணுவத்தின் முக்கியஸ்தர்களில் சிலரும் ஆதரவளித்தனர்  என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தக்குழு, தமிழ் கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. அந்தக் குழுவே வடக்கில் குழப்பங்களை தோற்றுவிப்பதற்கு தற்போது பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .