2025 மே 21, புதன்கிழமை

3 இராணுவத்தினருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் மூவரையும் எதிர்வரும் 7ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் வை.ஆர். பி. நெலும்தெனிய உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை அடுத்த வழக்கு தினத்தன்று சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட, 2010 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X