2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முன்வாருங்கள்'

George   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

அந்நியர் ஆட்சியில் சுதந்திரம் என்பதற்கும் தற்போது கோரப்படும் சுதந்திரத்துக்கும் வேறுபாடு உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டி.எஸ்.சேனாநாயக்க தலைமையில் அன்றைய நாட்களில், தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து சுதந்திரத்துக்காக போராடியதாக கூறினார்.

சுதந்திர தின நிகழ்வுகள், கொழும்பு காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்றபோது, உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், '1505ஆம் ஆண்டிலிருந்து 1948 வரையான காலப்பகுதியில், அந்நியர்களிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுள்கொள்வதற்காக பலர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர்.

அதனைப்போது, 30 வருடங்களாக இருந்து விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்தத்தில் பல வீரர்கள் தமது உயிரை, உடல் உறுப்புகளை, குடும்பங்களை, குடும்பத்தின் பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை தியாம் செய்துள்ளனர்.

டொனமூர், கோல்புறுக் யாப்புகளின் ஊடாக பிரித்தானியரிடமிருந்து எமக்கு படிபடியாக அதிகாரங்கள் கிடைக்கப்பட்பெற்றிருந்தன.

அன்றைய நாட்களில், டி.எஸ்.சேனாநாயக்க தலைமையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து சுதந்திரத்துக்காக போராடினர்.

உலகில்  உள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகளிலும், சுதந்திரம் என்ற சொல்லுக்கு மாத்திரம் அதிக மதிப்பு, சிறப்பு உள்ளது.

நாம் அன்று கோரிய சுதந்திரத்துக்கும் இன்று கேட்கும் சுதந்திரத்துக்கும் வேறுபாடு உள்ளது. அனைவரும் வேறுபாடு மறந்து ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.

பொருளாதாரத்தை கட்டியெழும்பும் வகையில் பல செயற்றிட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X