Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
'புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், புங்குடுதீவில் வசிக்கும் பொதுமக்களுக்கு என்ன தெரியுமோ, அதுவே எனக்கும் தெரியும்' என்று தெரிவித்த மாணவியின் கொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 ஆவது சந்தேகநபர், அதனைத் தவிர வேறு எதுவுமே தனக்குத் தெரியாது என, நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் முக்கிய சாட்சியாக, 12ஆவது சந்தேகநபர் வாக்குமூலமளிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார்,
நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்கள்.
இதனையடுத்து, 'திறந்த நீதிமன்றத்தில் வைத்தா அல்லது இரகசியமான முறையிலா சாட்சியமளிக்கவுள்ளீர்?' அச்சந்தேகநபரைப் பார்த்து நீதவான் கேட்டார்.
'மாணவி கொலை தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது. மக்களுக்குத் தெரிந்த விடயங்களே எனக்கும் தெரியும்' என சந்தேகநபர் கூறினார்.
'மாணவி, பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பும் நேரத்தை 2 ஆம் மற்றும் 3 ஆம் சந்தேகநபர்களுக்கு 12ஆவது சந்தேகநபரே தகவல் வழங்கினார்' என, குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதற்கும் மறுப்புத் தெரிவித்த 12ஆவது சந்தேகநபர், 'அப்படியான எந்தத் தகவல்களையும் நான் சொல்லவில்லை. அப்படியெல்லாம் எனக்குத் தெரியாது' என்றார்.
இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
21 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago