2025 மே 17, சனிக்கிழமை

11 ஓ.ஐ.சிகளுக்கு இடமாற்றம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேவையின் தேவை கருதி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (ஓ.ஐ.சி) 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதானபொலிஸ் பரிசோதகர் டி.எம்.ஜே.கே. தஹனக, மேல் மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பதிகாரியாகவும், ஆனமடுவ பொலிஸ் பரிசோதகர் எச்.எம். உபுல் பியால் சம்மாந்துறைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். 

இலுப்புகடவாய் பொலிஸ் பிரதான பொலிஸ் பரிசோதகர்  கே.வி.எல் விக்ரமரத்ன களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டிருக்கும் வேளை, கொட்டாஞ்சேனை பொலிஸ் அதிகாரி டபிள்யூ.டிகே.சி நவரத்ன இலுப்புகடவாய்க்கு மாற்றப்பட்டுள்ளார். 

அத்துடன், பொத்துவில் பொலிஸ் பரிசோதகர் யு.பி. சேனவிரத்ன மட்டக்களப்புக்கும் ,குடிடிகல பொலிஸ் பரிசோதகர் பி.யு.வசாந்த குமார பொத்துவிலுக்கும் ஜா-எல பொலிஸ் பரிசோதகர் டபிள்யு. டபிள்யு.சி.பீ விஜேரத்ன குடிடிகலவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

மேலும், மீகாதென்ன பொலிஸ் பரிசோதகர் டி.கே. ஜயதிலக கொழும்பு போக்குவரத்து பிரிவுக்கும் கண்டி பொலிஸ் அதிகாரி டி.சி கோடகே  மீஹாதென்னக்கும் அங்குபுர பொலிஸ் அதிகாரி பி.வை.ஏ.எஸ். பியதாச வாகரைக்கும் வாகரை பொலிஸ் அதிகாரி பி.பி.கே. பி ஜயரத்ன அங்குபும்ரவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .