2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

83 கடல் நாட்கள் அனுமதிக்க வேண்டும்: தமிழக மீனவர்கள்

Kanagaraj   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவை அண்மித்த கடற்பரப்பில், 83 கடல் நாட்களில் மீன்பிடிப்பதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கத்தினர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான நான்காவது சுற்றுப்பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் கூறியதாவது:–

83கடல் நாட்களில் நாங்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இழுவலையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் இழுவலையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்கிறோம் என்றும், 3 ஆண்டுகள் எங்களுக்கு அனுமதி தேவை என்றும் கூறினோம்.

தங்கு ஊசி வலைகளை நிறுத்த வேண்டும் என்று இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் கூறினர். அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த முடிவுகள் இரு அரசுகள் முன்பும் வைக்கப்பட்டு, 5ஆம் திகதியன்று நடைபெறும் இராஜதந்திர மட்டத்திலான கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .