Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'கல்வியில் நாங்கள் முன்னேற்றம் காணும் போது தான், நாங்கள் பலமாக இருக்க முடியும்' என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, வலைப்பாடு கிராமத்தின் அடிப்படை தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு நேற்று புதன்கிழமை (02) மாலை வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வலைப்பாடு கிராமத்;தில், குடிநீர் பெற்;றுக்கொள்வதில் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், போக்குவரத்து வீதிகள் புனரமைக்கப்படாமை, பாடசாலைக்கான காணி உரிமை ஆகிய பிரச்சினைகள் மற்றும் இயற்கை சமநிலையை பாதிக்கும் வகையில் பொன்னாவெளிப் பகுதியில் கல்அகழ்வு மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், 'கல்வியில் நாங்கள் முன்னேற்றம் காணும் போது தான், நாங்;கள் பலமானவர்களாக இருக்க முடியும். நாங்கள் பலமானவர்களாக இருக்கும்; போது தான் எமது உரிமைகளை பெற்;றுக்கொள்ள முடியும். கல்வி எங்களின் அழியாத மூலதனம். அதனைக் கட்டியெழுப்ப வேண்டும். பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்;பட்டுள்ள முறைப்பாடுகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீதிப்புனரமைப்பு, குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.
பொன்னவெளிப் பகுதியில் கல் அகழ்வுகளை மேற்கொள்ளும் போது கடல்நீர் உட்புகுந்து எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். கல் அகழ்வுகளை மேற்கொள்;வதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றன.
பொன்னாவெளி பகுதியில் சீமெந்து உற்பத்திக்கான கல் அகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, இது தொடர்பில் மக்கள் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை' என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago