2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கொசுவம்' கோரிக்கைக்குஇலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

Gavitha   / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆசிரியைகள் சாறியைத் தொப்புளுக்கு கீழே அணிவது தொடர்பில்  மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்படுவதில்லை என்று  முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தாம் அணியும் ஆடைகள் தொடர்பில் ஆசிரியைகள் தீர்மானிப்பார்கள் என்றும் இதனை முதலமைச்சர் தீர்மானிக்கத் தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'முதலமைச்சரின் அறிக்கைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். ஆசிரியைகள் தொப்புள் தெரியாமால் ஆடை ஆணிவது தொடர்பில் நாங்கள் எந்தத் தவறையும் காணவில்லை. அது அமைச்சரின் தரப்புக்கு தவறாக தோன்றுமாக இருந்தால் அங்கு தவறுள்ளது.

இந்தத் தொப்புள் பிரச்சினை தானா மேல் மாகாணத்தில் இன்று முக்கிய பிரச்சினையாகவுள்ளது என அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும். இந்த விடயத்தில் எந்தவிதமான வலிமையான காரணமும் இல்லாததால் ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் எந்தவித விதிமுறைகள் மற்றும் தீர்மானமும் எடுக்க போவதில்லை என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X